795 Views
chow chow என்பது பூசணிக் குடும்பத்தைச் சேர்ந்த ஒரு பச்சைக் காய்கறியாகும்.ஆனால் இப்போது உலகின் பல்வேறுபகுதிகளில் பரவலாகப் பயிரிடப்பட்டு நுகரப்படுகிறது.
அந்த வகையில் பிரபலமான காய்கறிகளில் ஒன்றாக chow chow காய் தற்போது காணப்படுகின்றது.
chow chow காயில் குறைந்த கலோரிகளும், அதிக ஊட்டச்சத்தும் இருப்பதால் இது ஆரோக்கியமான காய்கறியாக கருதப்படுகிறது. அத்தியாவசிய விற்றமின்கள்,தாதுக்கள்,மற்றும் நார்ச்சத்து ஆகியவற்றைக் கொண்டுள்ளது. எனவே chow chow காயை சாப்பிடுவதால் எவ்வாறான நன்மைகள் கிடைக்கும் என்பது குறித்து இந்தப்பதிவில் பார்க்கலாம்.
உயர் இரத்த அழுத்தம் உள்ளவர்கள் chow chow காயை சாப்பிடலாம். இது நரம்புத் தளர்ச்சியைப் போக்கி நரம்புகளைக்கட்டுபடுத்தும் ஆற்றல் கொண்டது.chow chow காயில் கல்சியம் அதிகம் காணப்படுவதால் எலும்புகளை வலுப்பெறச்செய்கிறது. எனவே வளரும் குழந்தைகளுக்கும் இந்தக் காயை சமைத்துக் கொடுக்கலாம்.
வயிறு சம்பந்தமான அனைத்து பிரச்சினைகளையும் நீக்கி, வயிற்றை சுத்தமாக வைத்துக்கொள்ளும் சக்தி இதற்கு உண்டு.உயர்இரத்த அழுத்தத்தைக் குறைத்து, உடலை சமநிலையில் வைத்துக்கொள்ளும். மலச்சிக்கல் பிரச்சினையால்அவதிப்படுபவர்கள் இந்தக் காயை வாரம் இரு முறை உணவில் சேர்த்துக்கொள்ளலாம்.
கர்ப்பிணிப் பெண்களுக்கு கர்ப்ப காலத்தில் கை,கால்களில் வீக்கம் ஏற்படும். ஆதலால் நீர்ச்சத்து மிகுந்த காய்களில் ஒன்றானchow chow காயை உணவில் சேர்த்துக்கொள்ளலாம்.
வயிறு மற்றும் இடுப்புப் பகுதியில் சேர்ந்து இருக்கும் அதிகப்படியான கொழுப்புகளைக் கரைக்க chow chow காயை வேகவைத்து உப்பு, மிளகு, தண்ணீர் சேர்த்து சூப் செய்து காலை மற்றும் மாலை வேளைகளில் உணவிற்கு முன் இதைப்பருகலாம்.
வாரம் இருமுறையேனும் இந்த chow chow காயை உங்களது அன்றாட உணவில் சேர்த்துக் கொள்வதால், மேற்குறிப்பிட்டுள்ளபிரச்சினைகளிலிருந்து நல்ல தீர்வினைப் பெற்றுக்கொள்ளலாம்.