Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Jan
14
சும்மா இருங்கள்....

SooriyanFM Gossip - சும்மா இருங்கள்....Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

867 Views
யாரிடமாவது, `என்ன செய்கிறீர்கள் ...' என்று கேட்கும்போது, `சும்மாதான் ' என்று பதில் சொன்னால்,எங்கள்
றியாக்‌ஷன் என்னவாக இருக்கும்? கோபப்படுவோம் ... `சும்மா இருக்கிறேன்' - இந்த வார்த்தையை யார் சொல்லிக் கேட்டாலும் நம்மில் பலருக்கு கோபம்தான் வரும். ஆனால், சும்மா இருப்பதை மன நிம்மதிக்கான ஒரு வாழ்வியல் முறை என்று சொல்லலாம்.

இதனை தான் டச் மக்களும் சொல்கிறார்கள்.தினமும் கொஞ்ச நேரம் ஒதுக்கி, சும்மா இருங்கள் ' என பரிந்துரைக்கிறார்கள் அவர்கள். டச் மொழியில் `நிக்சென்' என்றால், `எதுவும் செய்யாமல் இருப்பது (Doing nothing)' என்று பொருள்.

அதாவது, சும்மா இருப்பது என்பது எந்த வேலையும் செய்யாமல் இருப்பது மட்டுமல்ல, மொபைல், டி.வி என எல்லா பொழுதுபோக்குகளையும் தள்ளிவைப்பது . நமக்கு ஆதாயம் தரும் விஷயங்கள்குறித்து பேசக்கூடாது. கையெழுத்து போடக்கூடாது. `அந்த நொடி, அந்த நிமிஷம் சும்மா மட்டுமே இருக்க வேண்டும்' என்பதுதான் டச்காரர்களின் கொள்கைகள்.

சும்மா இருப்பதன் (நிக்செனை) பயன்கள் ....

* மனஅழுத்தம் குறையும். ஆகவே, மனநலன் சார்ந்த தீவிர பிரச்னைகள், சிக்கல்கள் இருப்பவர்கள், மனநல ஆலோசகர் அல்லது மருத்துவரிடம் ஆலோசனைபெற்று, தினமும் நேரம் ஒதுக்கி `நிக்செனை' மேற்கொள்ளலாம்.

* `நிக்செனை'யே ஒரு வேலையாக நினைத்துச் செய்யும்போது, அது சோம்பேறித்தனத்துக்கு வழிவகுக்கலாம். எனவே, அட்டவணை இல்லாமல், நேரம் கிடைக்கும்போது `நிக்செனை' மேற்கொள்ளலாம்.

* `நிக்சென்', ஒருவரின் க்ரியேட்டிவிட்டியை அதிகரிக்கும். வழக்கத்தைவிட புத்துணர்ச்சியோடும் உற்சாகத்தோடும் செயல்பட உதவும். கவனச்சிதறல் ஏற்படாமலிருக்கவும் உதவும்.

* அடிக்கடி பதற்றமடைபவர்களுக்கு, `நிக்சென்' நிதானத்தைக் கற்றுத்தரும்.
அனைவருக்கும் பிடித்த, மிக எளிதான ரிலாக்ஸிங் வழிமுறையாக இருப்பதால், வருங்காலத்தில் நம் நாட்டிலும் இதற்கு வரவேற்பு கிடைக்கலாம்.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top