முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ நிதி குற்றச் செயல்கள் தொடர்பான விசாரணை பிரிவினரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
முன்னதாக அவர் இன்று காவல்துறை நிதி குற்றச் செயல்கள் தொடர்பான விசாரணை பிரிவுக்கு விசாரணைகளின் பொருட்டு சென்றிருந்தார்.
அவர் உள்நாட்டு வர்த்தக அமைச்சராக இருந்த போது பல சதோச வர்த்தக நிலையங்களில் நிதி கொடுப்பனவுகளை மேற்கொள்ளாது பொருட்களை பெற்றுக்கொண்டுள்ளதாக முறையிடப்பட்டுள்ளது.
இதன் போது முன்னாள் அமைச்சர் 52 லட்சம் ரூபாவரை மோசடி செய்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
லங்கா சத்தோச பிரதான காரியாலயத்தில் மொத்த மற்றும் கட்டுப்பாட்டு கணக்காய்வாளரினால் இந்த முறைப்பாடு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதனடிப்படையில் கடந்த 22 ஆம் திகதி காவல்துறையினர், நீதிமன்றத்தில் வழக்கொன்றையும் தாக்கல் செய்துள்ளனர்.
இது தொடர்பாக முழுமையான விசாரணையொன்றை மேற்கொள்ளுமாறு நீதிமன்றம் காவல்துறையின் நிதி மோசடி பிரிவுக்கு உத்தரவிட்டுள்ளது.