21 Views
நம்மில் பலர் வேலை அவசரத்தில் காலை உணவு சாப்பிட மறந்துவிடுகிறோம் அல்லது தவிர்க்கிறோம். ஆனால், இது மூளைக்கு ஒரு பெரிய தண்டனை என்று நிபுணர்கள் கூறுகின்றனர். காலை உணவைத் தவிர்ப்பது இரத்தச் சர்க்கரை அளவைக் குறைத்து, தலைவலி மற்றும் ஒற்றைத் தலைவலியை அதிகரிக்கச் செய்யும். அதுமட்டுமின்றி, இது நமது உடலின் நோய் எதிர்ப்பு சக்தியையும் பலவீனப்படுத்துகிறது.
நாள் முழுவதும் ஒரே இடத்தில் அமர்ந்திருப்பது அல்லது உடல் செயல்பாடுகளில் ஈடுபடாமல் இருப்பது மூளையின் நரம்புகளைப் பாதிக்கும். ஒரு நாளைக்குக் குறைந்தபட்சம் 30 நிமிடங்கள் வேகமாக நடப்பது மூளைக்குச் செல்லும் இரத்த ஓட்டத்தை அதிகரிக்கிறது.