உலக நாயகன் கமல்ஹாசனின் நடிப்பில் வந்த வேட்டையாடு விளையாடு திரைப்படத்தில் இடம்பெற்ற ''மஞ்சள் வெயில் மாலையிலே...'' பாடலின் மூலமாக, தமிழ் சினிமாவில் பாடகராக நுழைந்தவர் பாடகர் க்ரிஷ்.
பார்ப்பதற்கு அழகாக இருக்கிறார். நல்ல நேர்த்தியான தோற்றமுடையவர். அழகான மொழிவளம் மற்றும் பேச்சுத்திறன் கொண்ட இளமையான தோற்றத்துக்கு சொந்தக்காரர் என்று பல திறமைகள் ஒன்றாகியிருக்கிறது.
இந்நிலையில், இவரை நடிக்க வைத்தால் என்ன என பலருக்கு தோன்றியிருக்கும். அதை ஒருவர் நிறைவேற்றியிருக்கிறார் ஒருவர். செய்யது இப்ராஹிம் என்கிறவர் இயக்கம் இப்படத்துக்கு ''புரியாத ஆனந்தம் புதிதாக ஆரம்பம்'' என பெயரிடப்பட்டுள்ளது.
க்ரிஷ் ஜோடியாக சிருஷ்டி டாங்கோ நடிக்கிறார். இசைப்புயலின் சகோதரி ரைஹானா இப்படத்துக்கு இசையமைக்கிறார். எல்லோரும் வெளிப்படையாகப் பேசாத காதலைப் பற்றி வித்தியாசமான கோணத்தில் சொல்லவரும் படமாகவும், க்ரிஷுக்கு நல்ல ஆரம்பக் களம் கொடுக்கும் படமாகவும் இந்தப்படம் அமையவுள்ளது என்கிறது படக்குழு.
-கோடம்பாக்கக் குருவி-