Rishard on charges against him over Wilpathu - குற்றம் நிரூபிக்கப்பட்டால் பதவி விலகுவேன் - றிசாட்Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka
2,173 Views
வில்பத்து தேசிய சரணாலத்தினை சூழவுள்ள பகுதியில் சட்டவிரோதமாக மீள்குடியோற்றம் செய்யப்பட்டுள்ளதாக தம்மீது சுமத்தப்படும் குற்றச்சாட்டுகளை நிராகரிப்பதாக அமைச்சர் றிசாட் பதியுர்தீன் தெரிவித்துள்ளார். நேற்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின்போதே அவர் இவ்வாறு மறுப்பு தெரிவித்துள்ளார்.
வடக்கில் வில்பத்து சரணாலய பகுதியின் பாதுகாப்பு பிரதேசத்தை சுவிகரித்து, அதில்; முஸ்லிம் மக்களை குடியேற்றினார் என்று கடந்த வருடம் ஏப்ரல் மாதம் தெரியவந்தது.
இந்த நிலையில், தம்மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளை அவர் மறுத்திருந்தார்.
பாதுகாப்பு வனப்பகுதியை அபகரித்து அங்கு முஸ்லிம் மக்களை குயேற்றியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இது முற்றான பொய்யான ஒரு விடயமாகும்.
இவ்வாறு யாருக்கும் காணி வழங்கப்பட வில்லை.
மன்னார் மரிச்சிகட்டி பகுதிலேயே மக்கள் குடியேற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
இவ்வாறு யாரேனும் குடியேற்றம் செய்யப்பட்டுள்ளார்கள் என்று நிரூபிக்கப்பட்டால், தாம் தமது அமைச்சு பதவியை துறக்க தயாராக உள்ளதாக என றிசாட் பதியுதீன் குறிப்பிட்டார்.