பாடகராகவும் புகழ் பெற்று வரும் தேசிய விருது பெற்ற நடிகர் தனுஷ், தான் அதிர்ஷ்டசாலி என தனது ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.
ஒளிப்பதிவாளர் வேல்ராஜ் இயக்கத்தில் அமலாபால் ஜோடியாக தனுஷ் நடித்து வரும் படம் 'வேலையில்லாத பட்டதாரி'. இப்படம் தனுஷின் 25வது படம் என்பது குறிப்பிடத்தக்கது.
இப்படத்திற்கு இசை அமைக்கிறார் அனிருத்.
இப்படத்திலும் தனுஷ் ஒரு மெலடிப் பாடல் பாடியுள்ளார். அப்பாடலில் இன்னும் ஓர் சிறப்பம்சம் என்னவென்றால், தனுஷூடன் அந்த மெலடி டூயட்டைப் பாடியது S.ஜானகியம்மா என்பது தான்.
கொலை வெறி பாடல் மூலம் உலகப் புகழ் அடைந்தார்கள் அனிருத்தும், தனுஷும். அப்பாடலிற்காக இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் தனுஷிற்கு விருந்தளித்து பாராட்டியது குறிப்பிடத்தக்கது.
சமீபத்தில் வௌியான நய்யாண்டி படத்திலும், டெடி பியர் என்ற பாடலைப் பாடியிருந்தார் தனுஷ்.
இந்நிலையில் உடல்நிலை காரணமாக கடந்த 10 ஆண்டுகளாக தமிழ் திரை இசைப் பாடல்களைத் தவிர்த்து வந்த ஜானகியம்மா, இப்படத்தில் தனுஷுடன் சேர்ந்து மெலடிப் பாடல் ஒன்றைப் பாடியுள்ளார்.
ஜானகியம்மாவுடன் பாடல் பாடிய அனுபவம் குறித்து தனது ட்வீட்டரில் இவ்வாறு கருத்து தெரிவித்துள்ளார் தனுஷ், ‘எங்களுக்காக மீண்டும் பாட சம்மதித்ததற்கு ஜானகியம்மாவிற்கு வேலையில்லாத பட்டதாரி படக்குழுவினர் நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறோம். நான் மிகவும் அதிர்ஷ்டசாலி மற்றும் ஆசிர்வதிக்கப்பட்டவன், அதனால் தான் ஜானகியம்மாவுடன் பாடும் வாய்ப்பு எனக்குக் கிடைத்துள்ளது´ எனத் தெரிவித்துள்ளார்.
S.ஜானகி அவர் பாட ஆரம்பித்த 50ஆம் ஆண்டு காலப்பகுதி முதல் அத்தனை பாடக, பாடகியருடனும் சேர்ந்து பாடியுள்ளார் என்பது குறிப்பிடத் தக்கது.
5,044 Views
சீயான் விக்ரம் நடித்து சமீபத்தில் வந்த படங்கள் அவருக்குப் பெயர் சொல்லும் படி அமையாததால் ஷங்கரின் "ஐ' படத்தில் மிகவும் உடல் வருத்தி நடித்து வருகிறார்.
இந்தப் படம் முடிந்ததும் சில மசாலா படங்களிலும் நடிக்க முடிவு செய்துள்ளார். இதற்காக கௌதம் மேனன், தரணி போன்றோர் படங்களில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.
விக்ரமை செதுக்கிய பாலாவின் அடுத்த படத்தில் நடிக்கவும் வாய்ப்பு வந்ததாம். ஆனால் படப்பிடிப்பு நீண்ட நாள் நடக்குமே என்று மறுத்துவிட்டதாகக் கேள்வி.
15,230 Views
இசையமைப்பாளர் விஜய் அன்டனி, ‘நான்’ படத்தில் ஹீரோவாக நடித்ததை அடுத்து,மேலும் சில இளவட்ட இசையமைப்பாளர்களையும் ஹீரோவாக்கும் முயற்சியில் சில புதுமுக இயக்குனர்கள் கதைகளுடன் வலம் வந்தனர். ஆனால், அதற்கடுத்தபடியாக யாருமே பிடிகொடுக்காதபோதும் ஜி.வி.பிரகாஷ்குமார் மட்டும் தனக்குள் இருந்த ஹீரோ ஆசையை வெளிப்படுத்தி கதை கேட்டார்.
பல கதைகள் கேட்டதில் மதயானைக்கூட்டம் என்ற கதை பிடித்து விட அதில் நடிப்பதாக இருந்தார். ஆனால், கதை பிடிக்கவில்லையோ என்னவோ திடீரென்று கதிர் என்ற வேறொரு நடிகரை அந்த கதையில் நடிக்க வைத்து விட்டு தான் நழுவிக்கொண்டார்.
அதன்பிறகும் தொடர்ச்சியாக கதை கேட்டு வந்த ஜி.வி.பிரகாஷ், இப்போது பென்சில் என்ற படத்தில் நடிப்பதாக அறிவித்திருக்கிறார். சாட்டை பட பாணியில் பள்ளிக்கூட மாணவர்களின் பிரச்னையை மையமாகக்கொண்டு உருவாகும் அந்த படத்தில் ப்ளஸ்-2 மாணவனாக நடிக்கிறார் அவர்.
அப்படத்தில் பிரகாஷ் குமாருக்கு ஜோடியாக ப்ரியாஆனந்த் நடிப்பதாக முன்பு கூறப்பட்டது ஆனால், தற்போது அவர் பிசியாக இருக்கிறார் என்பது மட்டுமின்றி, ஜி.வி.பிரகாஷ்குமாருக்கும், அவருக்கும் ஜோடி பொருத்தம் சரியாக வராது என்று சிலர் கருத்து சொல்ல, அவரை படத்திலிருந்து தூக்கி விட்டனர்.
அதனால் அவருக்குப்பதிலாக வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தில் சிவகார்த்திகேயனுடன் நடித்த தெலுங்கு நடிகை ஸ்ரீதிவ்யாவை புக் பண்ணியிருக்கிறார்கள்.
ஊதாக்கலரு இப்போது ராசியான கலர் தான் போல..
ஸ்ரீதிவ்யா நடித்த முதல் படமே ஹிட் என்பதோடு, அப்படத்தில் இடம்பெற்ற ஊதா கலரு ரிப்பன் என்ற பாடலும் ஹிட் ஆனதால், அதே பாணியில் இந்த படத்தில் ஒரு பாடலும் வைக்க திட்டமிட்டுள்ளாராம் ஜி.வி.பிரகாஷ்.
இனியென்ன கலக்கல் தான்.
4,457 Views
பேரூந்தில் படம் ஓடுவது பார்த்திருப்போம்.
பேரூந்தில் கதை செல்லும் படங்களும் பார்த்திருப்போம்.
ஆனால் இது பேரூந்தில் நடக்கும் திரைக்கதை.
பேரூந்து திரைப்படம் மதுரை to தேனீ வென்ற பிறகு மீண்டும் அப்படியான ஒரு படம்.
பேருந்தில் நடக்கிறது மீண்டும் ஒரு கதை.
சென்னையில் இருந்து மதுரை வரை போகும் பேருந்தில் நடக்கும் காதல், மோதல், சென்டிமெண்ட் கலந்து உருவாகும் படம் "சொகுசுப் பேருந்து".
ராசு மதுரவன் இப்படத்தை எழுதி இயக்கிறார்.
"ரேணிகுண்டா' ஜானியும், "சாட்டை' யுவனும் ஹீரோக்களாக நடிக்கிறார்கள். "பேராண்மை' படத்தில் நடித்த லியாஸ்ரீ, லிமா ஹீரோயின்கள்.
இளவரசு, கஞ்சா கருப்பு, "தீப்பெட்டி' கணேசன் உள்ளிட்டோர் முக்கிய பாத்திரமேற்று நடிக்கிறார்கள்.
"என் படங்களில் எப்போதும் மனித உணர்வுகள் பிரதானமாக இருக்கும். இந்தப் படத்திலும் அதைத்தான் முன்னிறுத்தி இருக்கிறேன்.
உசிலம்பட்டியில் நடந்த ஒரு உண்மை சம்பவத்தை சினிமா பாணியில் திரைக்கதையாக்கி இருக்கிறேன்.கதை முழுவதும் பேருந்தில் நடப்பதால், பென்ஸ் பஸ் ஒன்றை 25 நாள்கள் வாடகைக்கு எடுத்து படப்பிடிப்பை நடத்தி முடித்திருக்கிறோம்" என்றார் இயக்குநர் ராசு மதுரவன்.
4,536 Views