1,862 Views
கடந்த ஜனாதிபதித் தேர்தலின் போதுஐ.தே.க. விலிருந்து வெளியேறிய திஸ்ஸ அப்போதைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவுக்கு ஆதரவளித்ததுடன் , சுகாதார அமைச்சராகவும் பதவியேற்றிருந்தார்.
அவரது நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் முகமாக ஐக்கிய தேசிய கட்சியின் மத்திய செயற்குழு கட்சியில் இருந்துதிஸ்ஸவை நீக்கியிருந்தது.
இதனைத் தொடர்ந்து கட்சியின் நடவடிக்கைக்கு எதிராக திஸ்ஸ அத்தநாயக்க நீதிமன்றில் அடிப்படை உரிமை மீறல் மனுவொன்றை தாக்கல் செய்திருந்தார்.
இம் மனுமீது இன்று தீர்ப்பளித்த உயர் நீதிமன்றம்திஸ்ஸவை கட்சியில் இருந்து நீக்குவதற்குஉரிய நடைமுறைகள் பின்பற்றப்படவில்லை என்று கூறியதுடன் , அத்தீர்மானம் சட்டவிரோதமானது என தீர்ப்பளித்துள்ளது.