2,511 Views
அதே பிரதேசத்தைச் சேர்ந்த மான்னகே தொன் துஷாரி வாசனா என்ற 48 வயதான பெண்ணொருவரே கூடிய ஆயுத த்தால் தாக்கி கொலைசெய்யப்பட்டுள்ளார்.
3 பிள்ளைகளின் தாயாரான அவரின் கணவர் பல வருடங்களுக்கு முன்னர் உயிரிழந்துவிட்டதாக தெரிவிக்கப்படுகின்றனர்.
சம்பவதினத்தன்று அவர் நீண்ட நேரமாகியும் வீட்டுக்கு வராததால் உறவினர்கள் பொலிஸில் முறையிட்டுள்ளனர். இதனையடுத்து பொலிஸார் அடுத்த நாள் காலை சடலத்தை மீட்டுள்ளனர்.
பின்னர் பொலிஸார் மோப்ப நாயின் உதவியுடன் விசாரணைகளை மேற்கொண்டபோது, குறித்த நாய் சம்பவ இடத்திலிருந்து ஒரு கிலோ மீற்றர் தொலைவில் அமைந்துள்ள மருந்தகமொன்றின் முன் நின்றுள்ளது.
இதனைத் தொடர்ந்து விசாரணை செய்த பொலிஸார் மருந்தக உரிமையாளர் பிரதேசத்திலிருந்து தப்பிச் சென்றுள்ளமையை உறுதிசெய்துள்ளனர். சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.