5,368 Views
வர்த்தகர் மொஹமட் ஷியாமின் கொலை வழக்கு நேற்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே இந்நிகழ்வு இடம்பெற்றுள்ளது.
ஷியாமின் பிறப்பத்தாட்சிப் பத்திரத்தை உறுதிப்படுத்திக்கொள்ளும் பொருட்டு அவரது தாயாரன மொஹமட் தாவூத் உம்மா பரீனா நேற்று நீதிமன்றத்துக்கு அழைக்கப்பட்டிருந்தார்.
தனக்கு ஐந்து பிள்ளைகள் இருப்பதாகவும் , மொஹமட் ஷியாம் தனது பிள்ளையெனவும் , 1977 ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் 30 அவர் பிறந்த தாகவும் உம்மா பரீனா சாட்சியளித்துள்ளார்.
உயர் நீதிமன்ற நீதிபதிகளான லலித் ஜயசூரிய, சரோஜினி குசலா வீரவர்தன , அமேந்திரா செனவிரத்ன ஆகியோரை உள்ளடக்கிய நீதிபதிகள் குழாம் முன்னிலையில் இவ்வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட து.