5,721 Views
கொட்டாவ ஆனந்த மா வித்தியாலத்தின் அதிபரான எம்.ஜீ. தர்மதாச, பாலியல் இலஞ்சம் கோரியமை உட்பட 4 குற்றங்களையும் கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி அயிராங்கனி பெரேரா முன்னிலையில் ஒப்புக்கொண்டுள்ளார்.
கடந்த 2013 ஆம் ஆண்டு ஓகஸ்ட் 30 மற்றும் 2013 செப்டெம்பர் 14 வரையான காலப்பகுதியில் 2014 ஆம் ஆண்டுக்கு முதல் தரத்தில் மாணவன் ஒருவனை சேர்த்துக்கொள்ளும் பொருட்டு தாயொருவரிடம் பாலியல் இலஞ்சம் கோரியிருந்தார்.
இதனையடுத்து மாணவனின் தாயார் வழங்கிய முறைப்பாட்டை அடுத்து குறித்த அதிபர் ஹோட்டலொன்றில் வைத்து கைதுசெய்யப்பட்டிருந்தார்.