பீட்சா, ஜிகர்தண்டா ஆகிய இரண்டே வெற்றி படங்களில் கோலிவுட்டின் முன்னணி இயக்குனர் வரிசையில் இடம்பிடித்த கார்த்திக் சுப்புராஜ், தற்போது தனது மூன்றாவது படைப்பான 'இறவி' படத்தின் ஆரம்பகட்ட பணிகளில் மூழ்கியுள்ளார். மூன்றாவது படமும் வெற்றிப்படமாக அமையவேண்டும் என்ற முனைப்பில் தற்போது இந்த படத்தின் முழு திரைக்கதையையும் அவர் இறுதி செய்துவிட்டதாக கூறப்படுகிறது.
எஸ்.ஜே.சூர்யா, விஜய் சேதுபதி, பாபிசிம்ஹா, கருணாகரன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கவிருக்கும் இந்த படத்தில் அஞ்சலி ஹீரோயினியாக நடிக்கவுள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு இம்மாதம் ஆரம்பிக்கவுள்ளதாகவும், இம்மாத இறுதியில் அஞ்சலி இந்த படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொள்வார் என்றும் கூறப்படுகிறது. சந்தோஷ் நாராயணன் இசை.
கார்த்திக் சுப்புராஜின் முந்தைய படம் 'ஜிகர்தண்டா' மதுரையை மையமாக வைத்து தயாரானது என்பது தெரிந்ததே. ஆனால் இறவி படம் முழுக்க முழுக்க சென்னையை மையமாக கொண்ட திரைக்கதை என்பதால் சென்னையில் இதுவரை கோலிவுட் இயக்குனர்கள் கால் வைக்காத லொகேஷன்களை கார்த்திக் சுப்புராஜின் உதவி இயக்குனர்கள் தேடி வருவதாக தகவல்கள் கூறுகின்றன.