Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

May
19
ஷீகா ஜோஷி தற்கொலை

Sheeka Joshi Suicide - ஷீகா ஜோஷி தற்கொலைSooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

10,303 Views
இந்தி நடிகை ஷீகா ஜோஷி கத்தியால் தன்னை தானே குத்தி தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

இந்தியில் கடந்த 2012 ஆம் ஆண்டு வெளியான ‘பி.ஏ. பாஸ்’ என்ற படத்தில் முன்னணி நடிகை ஷில்பா சுக்லாவுடன் நடித்தவர், நடிகை ஷீகா ஜோஷி (வயது 40).

இவர் மும்பை வெர்சோவா பகுதியில் உள்ள அடுக்குமாடி கட்டிடத்தில் தன்னுடைய தோழி ஒருவருடன் வாடகைக்கு வசித்து வந்துள்ளார். இந்த நிலையில், நேற்று முன்தினம் அவருடைய தோழி வெளியில் சென்றுவிட்டு வீட்டுக்கு வந்துள்ளார்.

அப்போது, கதவு உள்புறமாக பூட்டியிருந்துள்ளது. எனவே அவர் கதவை தட்டியுள்ளார். அப்போது, ‘சிறிதுநேரம் காத்திரு. கதவை திறந்துவிடுகிறேன்’ என்று ஷீகா ஜோஷி உள்ளே இருந்து பதிலளித்துள்ளார். அதன்படி, அவருடைய தோழி வெளியில் காத்து நின்றுள்ளார். ஆனாலும், கதவு திறக்கப்படவில்லையாம். பலமுறை கதவை தட்டி பார்த்தும் பதிலில்லை. இதனால், சந்தேகம் அடைந்த அவர், தன்னிடம் இருந்த மற்றொரு சாவி மூலம் கதவை திறந்து உள்ளே சென்றுள்ளார்.

அங்கு அவர் கண்ட காட்சி நெஞ்சை உலுக்குவதாக இருந்துள்ளது. ஷீகா ஜோஷி தொண்டையில் கத்தி குத்திய நிலையில் உயிருக்கு போராடி கொண்டிருந்துள்ளார். அவர் தொண்டையில் இருந்து ரத்தம் நிற்காமல் கொட்டியது. இதை பார்த்து பதறிப்போன தோழி, என்ன செய்வதென்று புரியாமல் திகைத்தார். உடனடியாக அவரை மீட்டு வைத்தியசாலைக்கு  காரில் அழைத்து சென்றுள்ளார். அவரது உடல்நிலையை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர்.

முதற்கட்ட விசாரணையில், மன அழுத்தம் காரணமாக நடிகை ஷீகா ஜோஷி தன்னை தானே கத்தியால் குத்திக் கொண்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்துள்ளது.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top