4,516 Views
குறித்த வைத்தியசாலையில் மேற்கொள்ளப்பட்ட இரட்டைக் குழந்தைகளை பிரித்தெடுக்கும் முதல் சத்திர சிகிச்சை இதுவாகும்.
இச் சத்திரசிகிச்சைக்காக 15 விசேட வைத்திய நிபுணர்கள் பங்குபற்றியதாக தெரிவிக்கப்படுகின்றது.
அக்மீமன- குருந்துவத்தை பிரதேசத்தைச் சேர்ந்த மீனவரான பிரதீப் குமார மற்றும் ஆசா தமயந்தி தம்பதியினருக்கு கடந்த மார்ச் மாதம் 11 ஆம் திகதி இக்குழந்தைகள் பிறந்திருந்தன.
பிறந் து முதல் அப் பெண் குழந்தைகள் இருவரும் மருத்துவ மனையிலேயே பராமரிக்கப்பட்டு வந்துள்ளனர்.
இந்நிலையில் நேற்று முன் தினம் இக்குழந்தைகளை பிரிக்கும் சத்திரச் சிகிச்சையை மருத்துவர்கள் நடத்தியுள்ளனர்.
திலோகி மற்றும் திவங்கி என்று பெயரிடப்பட்ட இக்குழந்தைகளில் திவங்கி பலவீனப்பட்ட குழந்தையாக இருந்ததாகவும் எனவே அவரை சத்திரசிகிச்சை மூலம் அகற்றவும் மருத்துவர்கள் தீர்மானித்திருந்துள்ளனர்.
இதன்படி , மருத்துவர்கள் அக்குழந்தையை அகற்றி திலோகியை காப்பாற்றியுள்ளனர்.
இந்த சத்திரசிகிச்சை 10 மணித்தியாலங்கள் வரை இடம்பெற்றுள்ளது.