9,497 Views
அதுமட்டுமல்லாது கோடியில் புரள்கிறார் சிவா எனவும் தகவல்கள் கசிந்தன, இது இப்படி இருக்க கோடிகளை சம்பளமாக கொடுத்து பிரபலங்களை வைத்து விளம்பரங்கள் தயாரிக்கவும் விளம்பர தயாரிப்பு நிறுவனகள் ரெடி. அப்படி சிவகார்த்திகேயனை தேடிவந்த ஒரு வாய்ப்பை மறுத்துள்ளார்.
ஒரு பிரபல கோலா நிறுவனம் சிவகார்த்திகேயனை தன் விளம்பர படத்தில் நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடத்தியுள்ளது ஆனால் சிவா அந்த வாய்ப்பை மறுத்துள்ளார் அந்த கோலாவில் மனித உடலுக்கு தீங்கு விளைவிக்கும் நச்சுப்பொருள் கலந்திருப்பதாக உறுதிப்படுத்தப்பட்ட தகவல்கள் இருப்பதாலேயே நடிக்க மறுத்துள்ளார் நல்ல உள்ளம்கொண்ட சிவா.
இது பற்றி ட்விட்டர் தளத்தில் ரசிகர் ஒருவர் மூலமாகவே செய்திகள் வெளியானது குறிப்பிடத்தக்கது.

சத்தமில்லாமல் சமூகத்துக்கு நல்லது செய்யும் சிவா.
-வர்ஷி-