அஜித் தான் நடிக்கும் ஒவ்வொரு படத்தின் படப்பிடிப்பு முடிவிலும் மொத்த படக்குழுவிற்குமே பிரியாணி சமைத்து போடுவதை வழக்காமாகக் கொண்டுள்ளவர். தற்பொழுது சிறுத்தை சிவா இயக்கத்தில் அஜித், ஸ்ருதிஹாசன், லட்சுமிமேனன் உள்ளிட்ட பலர் நடிப்பில் அஜித்தின் 56வது படத்தின் படப்பிடிப்பு நடந்துவருகிறது.
நாயகியாக நடிக்கும் ஸ்ருதிஹாசன் அஜித்தின் சமையலைப் பாராட்டியும் அவருடன் வேலை செய்த அனுபவத்தையும் இணையத்தில் ட்விட் செய்துள்ளார்.
“அஜித் மிகச் சிறந்த மனிதர் மட்டுமில்லாமல் சிறந்த சமையல்காரரும் கூட. இந்த படத்தில் வேலை செய்வது எனக்கு மிகச்சிறந்த தருணம்” என்று ட்விட் செய்திருக்கிறார். படப்பிடிப்பு நடந்துவரும் இந்த நேரத்திலே மொத்த படக்குழுவிற்கும் அஜித் சமைத்துப் போட, ஸ்ருதியும் சாப்பிட்டிருக்கிறார் போலும்!
-கோடம்பாக்கக் குருவி-