Kotakethena murders - கொட்டகெத்தனை சந்தேகநபர்கள் விடுவிக்கப்பட்டமையை எதிர்த்து ஆர்ப்பாட்டம்Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka
1,610 Views
கஹவத்தை நகரத்தில் நேற்று மாலை இடம்பெற்ற எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தை கலைப்பதற்கு காவல்துறையினர் உயர் அழுத்த நீர்ப்பாய்ச்சலை மேற்கொண்டிருந்தனர். கொட்டகெத்தன பிரதேசத்தைச் சேர்ந்த சிலர் கஹவத்தை நகரத்தில் ஆர்ப்பாட்டத்தை மேற்கொண்டதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
இதன்காரணமாக கொழும்பு - ரத்தினபுரி வீதியில் பாரிய போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
2012 ஆம் ஆண்டு ஜுலை மாதம் 19 ஆம் திகதி கஹவத்தை கொட்டகெத்தனை பிரதேசத்தில் தாயும், புதல்வியும் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பான 3 சந்தேகநபர்கள் நேற்று விடுவிக்கப்பட்டனர்.
நீதிமன்றம் வழங்கிய இந்த தீர்ப்புக்கு எதிர்ப்பு தெரிவித்தே இந்த ஆர்ப்பாட்டம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.