கொழும்பு - இரத்தினபுரி வீதியில் - எஹெலியகொட பகுதியில் இடம்பெற்ற விபத்தொன்றில் நான்கு பேர் பலியாகினர்.
காவற்துறை ஊடகப் பேச்சாளர் இதனைத் தெரிவித்துள்ளார்.
இன்று அதிகாலை 2.30 அளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
பேருந்து ஒன்றும், முச்சக்கர வண்டி ஒன்றும் மோதிக்கொண்டதில் இந்த அனர்த்தம் இடம்பெற்றதாக காவற்துறை ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.