7,912 Views
மேலும் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
அனுராதபுரத்தில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
ஐந்து இளைஞர்கள் ஒன்றாக இருந்து கஞ்சா புகைத்துக்கொண்டிருந்துள்ளனர்.
இதன்போது ஏற்பட்ட வாய்த்தர்க்கத்தில் நபரொருவர் அருகில் இருந்த போத்தலொன்றால் இருவர் மீது தாக்கியுள்ளார்.
இதில் அனுராதபுரம் டி.எஸ். சேனாநாயக மாவத்தையைச் சேர்ந்த 22 வயதான சுதேஸ் ஜூவன் த என்ற இளைஞன் உயிரிழந்துள்ளார்.
சம்பவத்தின் போது காயமடைந்தவர்களை மற்றைய இருவரே முச்சக்கர வண்டியொன்றில் வைத்தியசாலைக்கு கொண்டு சென்றுள்ளனர்.
இதனுடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபரை பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.