யாழ்ப்பாணம் நீதிமன்ற கட்டிட தொகுதி மற்றும் காவற்துறையினர் மீது கல்வீச்சு தாக்குதல் நடத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட 130 பேரில் 15 மாணவர்களுக்கு நேற்று பிணை வழங்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் நேற்று 47 பேர் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டனர்.
இதில் 32 பேர் எதிர்வரும் 17 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
அத்துடன் 15 மாணவர்களுக்கும் கடும் எச்சரிக்கை விடுக்கப்பட்டதுடன் ஒவ்வொரு மாதமும் இறுதி ஞாயிற்றுக்கிழமைகளில் யாழ்ப்பாண நீதிமன்றில் பிரசன்னமாக வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.
இதனிடையே, சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டவர்களில் 57 பேர் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் 73 பேர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.