Killinochi girl rescued - கிளிநொச்சியில் காணாமல்போன சிறுமி சடலமாக மீட்புSooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka
2,678 Views
கிளிநொச்சியில் கடந்த மாதம் காணாமல் போயிருந்த 3 வயதான பெண் குழந்தை ஒன்று நேற்று உருகுழைந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டதாக கிளிநொச்சி காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். கடந்த ஜூன் 21 ஆம் திகதி முதல் கிளிநொச்சியில் மூன்று வயது குழந்தை ஒன்று காணாமல் போனதாக காவல்துறையில் முறையிடப்பட்டிருந்தது.
இந்தநிலையில் கிளிநொச்சி உருத்திரபுரம் எள்ளுக்காடு என்ற பிரதேசத்தில் உள்ள வயல்வெளியில் இருந்து குழந்தையின் சடலம் மீட்கப்பட்டது.
மீட்கப்பட்ட குழந்தையின் சடலம் கிளிநொச்சி வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
உதயகுமார் யர்சிகா என்ற குழந்தை தனது தாயாருடன் சக்திபுரம் என்ற இடத்தில் நீராட சென்றவேளையில் காணாமல் போனதாக முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.