Bastian Mawatta murder - பயணப் பொதியில் மீட்கப்பட்ட சடலம்: சி.சி.டிவி காணொளி சிக்கியதுSooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka
23,123 Views
புறக்கோட்டை பஸ்ரியன் மாவத்தை பேரூந்து தரிப்பிடத்தில் இருந்து மீட்கப்பட்ட பெண்ணின் கொலையுடன் தொடர் கொண்ட சந்தேக நபர் குறித்து தகவல்கள் இருப்பின் கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவிற்கு தெரியப்படுத்துமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த கோரிக்கை காவல்துறையினால் விடுக்கப்பட்டுள்ளது. இதற்காக இரண்டு தொலைபேசி இலக்கங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக காவல்துறை ஊடகப் பேச்சாளர் ருவான் குணசேகர தெரிவித்துள்ளார்.
இதற்கு அமைய 011 2662311 அல்லது 011 2685151 என்ற இலக்கங்களுடன் தொடர்பு கொண்டு தகவல்களை வழங்க முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
புறக்கோட்டை - பெஸ்டியன் மாவத்தை தனியார் பேரூந்து நிலையத்தில் பயண பொதியில் இருந்து மீட்கப்பட்ட பெண்ணின் சலத்தை குறித்த பெண்ணின் தாயார் இன்று அடையாளம் காட்டியுள்ளார்.
காவல்துறை பிரேத அறையில் வைத்தே இந்த சடலம் அடையாளம் காணப்பட்டுள்ளது.
இவ்வாறு சடலமாக மீட்கப்பட்ட பெண் 34 வயதான யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டையை சேர்ந்தவர் என தெரியவந்துள்ளது.
இந்த நிலையில், இது தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ளும் கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவு அவரது தாயாரிடம் வாக்குமூலம் ஒன்றையும் பெற்றுள்ளது.
இந்த நிலையில, குறித்த பெண்ணின் கொலை தொடர்பிலான சந்தேக நபர்களை கைது செய்வதற்காக மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருவதாக கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவு தெரிவித்துள்ளது.
மேலும் இச்சம்பவம் தொடர்பான சி.டி. டிவி காணொளியும் எமக்கு கிடைக்கப்பெற்றுள்ளது.