11,937 Views
அகலவத்தை தாபிலிகொட பிரதேசத்தில் ஆற்றினுள் விழுந்த சகோதரிகள் இருவர் உயிரிழந்துள்ளனர்.
23 வயதான இரட்டையர்களே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.
இச்சம்பவம் கடந்த 1 ஆம் திகதி இடம்பெற்றுள்ளது.
மாடொன்றுக்கு பயந்தே இருவரும் ஆற்றுக்குள் விழுந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அப்பகுதியில் உள்ள மாடொன்று அப்பகுதியில் செல்வோரை முட்டுவதற்கு அடிக்கடி முயற்சி செய்வதாக தெரிவிக்கப்படுகின்றது.
மாலையில் குளிக்கச் சென்ற சகோதரிகள் திரும்பி வராத காரணத்தினால் தாயார் பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.
பின்னர் தேடுதலின் போது சடலம் மீட்கப்பட்டுள்ளது.
ஆற்றின் ஆழமான பகுதியொன்றுக்குள் இருந்து , ஒருவரை ஒருவர் அணைத்தவாரே சடலம் மீட்கப்பட்டுள்ளது.