கொத்மலை - ரம்பொடை - லில்லிஸ்லேண்ட் எனப்படும் கயிறுகட்டி தோட்டத்தில் நேற்று ஏற்பட்ட மண்சரிவில் மற்றுமொரு சடலம் மீட்கப்பட்டுள்ளது.
இதன்படி மண்சரிவு இடம்பெற்ற இடத்தில் இருந்து 7 பேர் சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர்.
அவர்களில் நான்கு பேர் சிறார்களாவர். மீட்பு பணிகள் இடைநிறுத்தப்பட்டுள்ளன.
5 வீடுகளைக் கொண்ட நெடுங்குடியிருப்பு ஒன்றில் இந்த மண்சரிவு இடம்பெற்றிருந்தது.
இதனால் நான்கு வீடுகள் சேதமடைந்துள்ளதாக, நுவரெலியா மாவட்ட செயலாளர் தெரிவித்துள்ளார்.
இதில் தங்கி இருந்த ஐந்து குடும்பங்களைச் சேர்ந்த 30 பேர் உள்ளடங்களாக 153 பேர் இடம்பெயர்ந்து மாற்று இடம் ஒன்றில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
மண்சரிவு இடம்பெற்ற வேளையில், குறித்த நெடுங்குடியிருப்பைச் சேர்ந்த பெரும்பாலானவர்கள் வீட்டில் இருக்கவில்லை.
இதற்கிடையில் மண்சரிவு இடம்பெற்ற பகுதியை ஆய்வு செய்வற்காக தேசிய கட்டிட ஆய்வு நிறுவனத்தின் குழு ஒன்று அங்கு சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.