குறித்த பெண் தோட்டத்தில் பணிபுரியும் 48 வயதான, இரண்டு பிள்ளைகளின் தாய் என தெரிவிக்கப்படுகிறது.
இந்த கொலை சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ளவென நேற்று மாலை இரகசிய காவல்துறை குழுவொன்று அங்கு சென்றுள்ளதாக காவல்துறை ஊடக பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
கஹவத்தையில் கடந்தகாலங்களில் பெண்கள் பலர் கொலைசெய்யப்பட்டிருந்தனர். இக் கொலைகள் நாட்டில் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தன.
மேலும் பல்வேறு ஊகங்கள் , வதந்திகளையும் ஏற்படுத்தியிருந்தன. மர்ம மனிதர்கள் , பலி கொடுக்கப்படுதல் என பல கதைகள் பரவி வந்திருந்தன.
அக் கொலைகளை அடுத்து பலர் அப்பிரதேசத்துக்கு செல்லவே அஞ்சினர். மேலும் அக் கொலைகளால் அப்பகுதி மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் தற்போது மீண்டும் பெண்ணொருவரின் சடலமொன்று கண்டுபிடிக்கப்பட்டமையானது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.