facebook தடை -குழம்பிய பாவனையாளர்கள்.
பூமி சுழல்கிறதோ இல்லையோ, ஆனால் facebook சமூக வலைத்தளம் சீராக சுழல்கிறது. பாடசாலை மாணவர்கள் கையில் school book இருப்பதனை விட இப்போது facebook தான் அதிகமுள்ளது. facebook இல்லாவிட்டால் வாழ்க்கையே இல்லை என்பது உலக வாசகமாகி இருக்கிறது. இந்த நிலையில், இன்றைய தினம் facebook வலைத்தளம் திடீரென முடக்கப்பட்டமை, facebook பிரியர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
இன்று அதிகாலை சுமார் நான்கு மணித்தியாலங்கள் வரையில் facebook சமூக வலைத்தளம் முடக்கப்பட்டமையால் மக்கள் பெரும் சோகத்தில் ஆழ்ந்திருந்தனர்.
இந்த நிலையில், facebook பாவனையாளர்கள் கட்டணம் செலுத்தியதன் பின்னரே facebook தளத்தை தொடர முடியும் என அண்மையில் பரவலாக பேசப்பட்டது. எனினும் அதனை முற்றாக மறுத்துள்ள facebook வலைத்தளம், எதுவித கட்டணங்களும் இன்றி facebook தளத்தை தொடர முடியும் எனவும், facebook முடக்கப்பட்டமைக்கான காரணத்தை கண்டறிந்து, அவற்றிற்கான தீர்வினை விரைவில் பெற்றுத் தருவதாகவும் உறுதியளித்துள்ளது
இன்றைய கால கட்டத்தில் சமூக வலைத்தளங்களின் பாவனை மக்களின் அத்தியாவசிய தேவைகளில் ஒன்றாக மாறிவிட்டதோ என எண்ணத் தோன்றுகிறது.