உலகளவில் சினிமா இரசிகர்களைப் பெரிதும் கவர்ந்த திரைப்படங்களில் மிக முக்கிய இடத்தில் உள்ள திரைப்படம்தான் 'Avatar'. இத் திரைப்படத்தில் காண்பிக்கப்பட்ட 'Pandora' கற்பனை உலகம் எங்களை வியப்பில் ஆழ்த்தியது.
கடந்த 2009ஆம் ஆண்டு இயக்குநர் James Cameronஇன் இயக்கத்தில் வெளியான 'Avatar' திரைப்படம் மிகப் பெரிய வெற்றிபெற்று மூன்று Oscar விருதுகளையும் வென்றது. 2022ஆம் ஆண்டு வெளிவந்த இதன் இரண்டாம் பாகமான 'Avatar: The Way of Water' திரைப்படம் சினிமா வரலாற்றில் அதிக வசூலைப் பெற்று அசத்தியது.
தற்போது 'Avatar' திரைப்படத்தின் மூன்றாம் பாகமான 'Avatar: Fire and Ash' திரைப்படம் கடந்த 19ஆம் திகதி வெளியாகி இரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.
அந்தவகையில் இத் திரைப்படம் வெளியாகிய 2 நாட்களில் உலகம் முழுவதும் இந்திய மதிப்பில் ரூ.1300 கோடி வசூல் செய்து சாதனை படைத்துள்ளது.