வெற்றிமாறன் இயக்கத்தில் கலைப்புலி S.தாணு தயாரிக்கும் சிம்புவின் ‘அரசன்’ திரைப்படத்தின் Promo வீடியோ சமீபத்தில் வெளியாகி இரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது. வடசென்னை கதையுலகின் ஒரு பகுதியாக உருவாகும் இத்திரைப்படத்தில் வடசென்னை திரைப்படத்தில் நடித்த சமுத்திரகனி , கிஷோர் , விஜய் சேதுபதி உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.
முதற்கட்டமாக சிம்புவின் இளம் பருவத்து காட்சிகள் படமாக்கப்பட்டு வருகின்றன.இந்நிலையில் கோவில்பட்டியில் நேற்று பூஜையுடன் தொடங்கியிருக்கும் முதற்கட்ட படப்பிடிப்பு மூன்று வாரங்கள் நடைபெறும் எனத் தெரிகிறது. மதுரையில் தொடங்கும் கதை, வட சென்னை வரை வருகிறது என்றும் சொல்கிறார்கள்.
தென்மாவட்டங்களில் சிலம்பரசனின் வருகை அவரது இரசிகர்களை குஷிப்படுத்தியிருக்கிற நிலையில் வரும் நாட்களில் அந்தப் பகுதி இரசிகர்களைச் சந்திக்கவும் அவர் திட்டமிட்டுள்ளார்.