அமெரிக்காவை சேர்ந்த Alef Aeronautics நிறுவனம், Alef Model A Ultralight 2 என்ற உலகின் முதல் பறக்கும் காரின் உற்பத்தியை தொடங்குவதாக அறிவித்துள்ளது.
இந்தக் காரை வழக்கமான கார் போல 4 சக்கரங்களுடன் ஓட்டவும் முடியும், சாலையில்
ஒட்டிக்கொண்டிக்கும் போதே, நிற்கும் இடத்தில் இருந்தே செங்குத்தாக Take off செய்து பறப்பில் ஈடுபடவும் முடியும்.
ஒரு முறை சார்ஜ் செய்தால் 350km வரை ஓடவும், 170km பறக்கவும் முடியும்.
இந்த வாகனம் 100% மின்சாரத்தில் இயங்க கூடியது. இந்தக் கார், அதிகபட்சமாக மணிக்கு 40 கிமீ வேகத்திலும், பறக்கும் போது அதிகபட்சமாக மணிக்கு 117 கிமீ வேகத்திலும் இயங்கும்.
சுமார் 5 மீட்டர் நீளமும் 2 மீட்டர் அகலமும் 385 கிலோ எடையும் கொண்டது.
2026 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் இது வாடிக்கையாளர்களுக்குக் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.