கேத்திரன் இயக்கத்தில், ராஜசேகரன் தயாரிப்பில் உருவான வடம் திரைப்படத்தில் நடிகர் விமல் ,புதுமுக நடிகை சங்கீதா மற்றும் நட்டி சுப்ரமணியம் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர் என்பதுடன் இத்திரைப்படத்திற்கு டி.இமான் இசையமைத்துள்ளார்.
இத்திரைப்படம் வடமாடு குறித்த கதையை கருவாக கொண்டு உருவாக்கப்பட்டுள்ளதால். இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு மதுரை, கோவை, தென்காசி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் நடைபெற்றுள்ளது.
இத்திரைப்டத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை நடிகர் சசிகுமார் வெளியிட்டுள்ளார்.மேலும் டீசர், மற்றும் இத்திரைப்படத்தின் வெளியீடு குறித்த அறிவிப்புகள் அடுத்தடுத்து வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.