லண்டனில் உள்ள 'லெஸ்டர் ஸ்கொயார்' புகழ்பெற்ற ஒரு சுற்றுலா தளமாகும். இங்கு 'Scenes in the Square' என்ற பெயரில் பிரபல நடிகர்கள் மற்றும் கதாபாத்திரங்களின் சிலைகள், திரைப்பட காட்சிகள் பல இடம்பெற்றுள்ளன. 'HarryPotter', 'Batman', 'Mr.Bean' உட்பட பல கதாபாத்திரங்களின் சிலைகள் வரிசையில் தற்போது 'Dilwale Dulhania Le Jayenge’ திரைப்படத்தில் நடித்த ஷாருக்கான், கஜோல் ஆகியோரின் கதாபாத்திரங்களின் வெண்கல சிலையும் நிறுவப்பட்டுள்ளது.
ரூ.4 கோடி செலவில் தயாரான இந்த திரைப்படம் 102 கோடிக்கு மேல் வசூலித்திருந்தது. அதேபோல் ‘Dilwale Dulhania Le Jayenge’ திரைப்படம் கடந்த 25 ஆண்டுகளாக மும்பையில் உள்ள மராத்தா மந்திர் தியேட்டரில் தினமும் ஒரு காலை அல்லது பகல் காட்சியாக திரையிடப்பட்டு வந்ததும் குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் ஷாருக்கான், கஜோல் நடித்த ‘Dilwale Dulhania Le Jayenge’ திரைப்படத்தின் 30 ஆண்டு நிறைவைக் கொண்டாடும் விதமாக லண்டன் லெஸ்டர் சதுக்கத்தில் இவர்களின் வெண்கல சிலை அமைக்கப்பட்டுள்ளது. இங்கு அமைக்கப்படும் முதல் இந்திய திரைப்பட உலோக சிலை இதுதான்.இந்த சிலையின் திறப்பு விழாவில் ஷாருக்கானும், கஜோலும் கலந்து கொண்டார்கள்.