நலன் குமாரசாமி இயக்கத்தில் 'வா வாத்தியார்' திரைப்படத்தில் கார்த்தி மற்றும் கீர்த்தி ஷெட்டி நடித்துள்ளனர். இத் திரைப்படம் கார்த்தியின் 26 ஆவது திரைப்படமாகும்.
இத் திரைப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். இத்திரைப்படத்தில் ராஜ்கிரண் முக்கிய கதாபாத்திரத்திலும் சத்தியராஜ் வில்லன் கதாபாத்திரத்திலும் நடிக்கின்றனர்.
இத் திரைப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய இரண்டு மொழிகளிலும் இந்த மாதம் 12 ஆம் திகதி வெளியாகவுள்ள நிலையில் இத்திரைப்படத்தின் தெலுங்கு Promotion விழா நேற்று இடம்பெற்றது. அதில் தெலுங்கில் பேசிய கார்த்தி "சூர்யா ஐதராபாத்தில் தான் சூட்டிங்கில் உள்ளார்” என்று கூற இரசிகர்கள் “கைதி 2” என்று கூச்சல் இட்டனர். இதனை தொடர்ந்து “கைதி 2 திரைப்படம் விரைவில் வெளியாகும்" என பதிலளித்திருந்தார்.