அறிமுக இயக்குநர் ராஜ்குமார் ரங்கசாமி இயக்கத்தில் ஆதித்யா பாஸ்கர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படத்தில் கௌரி கிஷன், சரஸ்வதி மேனன், கே. பாக்யராஜ், ரெடின் கிங்ஸ்லி, டிஎஸ்ஆர் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர் . இத் திரைப்படத்திற்கு எம். எஸ். ஜோன்ஸ் ரூபர்ட் இசையமைத்துள்ளார்.
இத் திரைப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் நிறைவடைந்து தற்போது படப்பிடிப்புக்கு பிந்தைய தொழில்நுட்ப பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்றும், விரைவில் இத் திரைப்படத்தின் Title மற்றும் First Look Poster வெளியிடப்படும் என்றும் படக்குழுவினர் மகிழ்ச்சியுடன் பகிர்ந்து கொண்டுள்ளனர்.
இத் திரைப்படத்தைப் பற்றி இயக்குநர் பேசுகையில், உண்மை சம்பவத்தை தழுவி தற்போதைய Gen Z தலைமுறையினர் இரசிக்கும் வகையில் திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது. '96' திரைப்படத்திற்கு பிறகு மீண்டும் ஆதித்யா பாஸ்கர், கௌரி கிஷன் ஜோடி இணைகிறார்கள். இது அனைத்து இரசிகர்களையும் கவரும் என்று கூறியுள்ளார்.