சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் ‘பராசக்தி’ படத்தில் நடித்துள்ளார்.
இப்படத்துக்கு ஜி. வி. பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார்.
அடுத்தாண்டு ஜனவரி 14ஆம் திகதி பொங்கல் தினத்தன்று 'பராசக்தி' திரைப்படம் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
இந்த திரைப்படத்தின் முதல் இரண்டு பாடல்களும் வெளிவந்து நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளன.
இந்நிலையில் இந்த திரைப்படத்தின் மூன்றாவது பாடலுக்கான ப்ரோமோ இன்று மாலை வெளியாகியுள்ளது.
‘நமக்கான காலம்’ எனும் இந்தப் பாடல் எதிர்வரும் 14ஆம் திகதி வெளியாகுமென திரைப்படக்குழு அறிவித்துள்ளது.