இயக்குநர் பாலா இயக்கத்தில் 1999 ஆம் ஆண்டு நடிகர் சீயான் விக்ரம் நடித்து வெளிவந்த திரைப்படம் 'சேது'.
இத்திரைப்படம் வெளியாகி இன்றுடன் 26 வருடங்கள் ஆகின்றன. பல வருடங்களாக திரைத்துறையில் நடித்து வந்த நடிகர் விக்ரமிற்கு 'சேது' திரைப்படம் ஸ்டார் அந்தஸ்தைக் கொடுத்தது.
இயக்குநர் பாலாவும் விக்கிரமும் 'பிதாமகன்' திரைப்படம் மூலம் மீண்டும் இணைந்து பணியாற்றியிருந்தனர்.
'சேது' திரைப்படம் தெலுங்கு,கன்னடம் மற்றும் ஹிந்தியில் ரீமேக் ஆகியிருந்தது.
இந்த நிலையில், 'சேது' திரைப்படத்தை Re - Release செய்ய முயற்சிகள் நடந்துகொண்டிருக்கின்றன.