விஜய் நடிப்பில், H.வினோத் இயக்கத்தில் அனிருத் இசையில் உருவாகி வரும் ஜன நாயகன் திரைப்படத்தில் பூஜா ஹெக்டே, மமிதா பைஜு, பிரியாமணி, பாபி தியோல், கவுதம் வாசுதேவ் மேனன், நரேன் ஆகியோர் நடித்துள்ளனர். இத்திரைப்படம் அடுத்தாண்டு பொங்கலுக்கு திரைக்கு வரவுள்ளது.
விஜய் நடிக்கும் கடைசிப் திரைப்படம் என்பதால், இரசிகர்கள் மத்தியில் இதற்கான எதிர்பார்ப்பும் அதிகமாக உள்ளது.
இத்திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா டிசம்பர் 27ம் தேதி மலேசியாவில் உள்ள புகித் ஜலீல் அரங்கத்தில்
பிரமாண்டமாக நடைபெற உள்ள நிலையில் இந்த இசை வெளியீட்டு விழாவில் நடிகர் தனுஷ் கலந்துகொள்ள உள்ளதாகவும் தகவல் வெளியாகி கசிந்துள்ளது.
விஜய் ஒருபுறம் குட்டிக் கதை சொல்ல தனுஷ் மறுபுறம் ரஜினி ஸ்டைலில் பேச ஒரே கொண்டாட்டமாக இருக்கும் என இரசிகர்கள் எதிர்பார்கின்றனர்.