நடிகர் ரஜினிகாந்தின் 75ஆவது பிறந்தநாளையொட்டி, அவரது நடிப்பில் 1999ஆம் ஆண்டில் வெளியாகி சூப்பர் ஹிட் ஆன 'படையப்பா' திரைப்படம் மீண்டும் இம்மாதம் 12ஆம் திகதி Re - Release ஆனது.
திரைபிரபலங்களும், இரசிகர்களும் பெரும் ஆர்வத்துடன் இத்திரைப்படத்தைக் கண்டுகளித்து வருகிறார்கள்.
'படையப்பா' திரைப்படம் இதுவரை இந்திய மதிப்பில் ரூ.4 கோடி வசூலித்துள்ளது.
வெளிமாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளிலும் இந்திய மதிப்பில் ரூ.2 கோடி வரை வசூலித்துள்ளதாகக் கூறப்படுகிறது.
தளபதி விஜய் நடித்த 'கில்லி' திரைப்படம் தான் இதுவரை Re - Release ஆனா திரைப்படங்களில் இந்திய மதிப்பில் ரூ.10 கோடி அதிக வசூல் செய்த திரைப்படம் என்ற பெருமையைத் தக்கவைத்துள்ளது.
அந்த சாதனையை ரஜினிகாந்தின் 'படையப்பா' திரைப்படம் இன்னும் ஓரிரு நாட்களில் முறியடிக்கலாம் என்று தெரிவிக்கிறார்கள்.