சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் திரையில் அறிமுகமாகி இந்த ஆண்டோடு ஐம்பது ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில் பல பிரபலங்களும் அவருக்கு வாழ்த்து தெரிவித்திருந்தனர்.இந்த திரைசாதனையை கொண்டாடும் வகையில், அவரது பிறந்தநாளான டிசம்பர் 12ஆம் திகதி அவரது 'படையப்பா' திரைப்படம் மீண்டும் திரையரங்குகளில் புதிய பொலிவுடன் திரையிடப்படுகிறது.
இந்த தகவலை சௌந்தர்யா ரஜினிகாந்த் தனது X பக்கத்தில் தெரிவித்திருந்தார்.மேலும் 'படையப்பா' திரைப்படம் தொடர்பான தனது அனுபவங்களை ரஜினி பகிர்ந்துகொள்ளும் ஒரு சிறப்பு GLIMPSE வீடியோ நேற்று மாலை வெளியாகும் எனவும் தெரிவித்திருந்தார்.ஆனால் வீடியோ வெளியாகவில்லை. இந்நிலையில் தொழில்நுட்ப கோளாறால் வீடியோ வெளியாக தாமதமாவதாக தெரிவித்துள்ள அவர் விரைவில் வீடியோ வெளியிடப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.