நடிகர் மம்மூட்டி புழு, பிரம்மயுகம் ஆகிய திரைப்படங்களைத் தொடர்ந்து மீண்டும் வில்லனாக நடித்துள்ள புதிய திரைப்படம் ‘களம்காவல்’. ஜிதின் K.ஜோஷ் இயக்கிய இத்திரைப்படத்தை துல்கர் சல்மான் மற்றும் மம்முட்டி இணைந்து தயாரித்துள்ளனர்.
Crime Thriller திரைப்படமாக உருவான ‘களம்காவல் திரைப்படத்தில், காவல்துறைக்குச் சவால்விடும் கதாபாத்திரத்தில் நடிகர் மம்மூட்டி நடித்திருக்கிறார்.
இந்நிலையில், டிசம்பர் 5ஆம் திகதி வெளியாகிய ‘களம்காவல்’ திரைப்படம் முதல் நாளில் இந்திய மதிப்பில் ரூ.15.7 கோடி வசூல் செய்துள்ளதாக திரைப்படக்குழு அறிவித்துள்ளது.