Bollywood சினிமாவில் கடந்த 2013ஆம் ஆண்டு வெளியான 'Raanjhanaa' திரைப்படத்தின் மூலம் அறிமுகமாகிய நடிகர் தனுஷ், தற்போது அத் திரைப்படத்தின் இயக்குநரான ஆனந்த் எல்.ராய் இயக்கத்தில் உருவான 'Tere Ishk Mein' திரைப்படத்தில் நடித்துள்ளார். இப்படம் கடந்த 28ஆம் திகதி திரையரங்குகளில் வெளியானது.
இத்திரைப்படத்தில் தனுஷுக்கு ஜோடியாக Kriti Sanon நடித்திருக்கிறார். கலவையான விமர்சனங்களை 'Tere Ishk Mein' திரைப்படம் சந்தித்தாலும் வசூலில் கலக்கி வருகிறது.
அந்த வகையில், இத்திரைப்படம் வெளியான 10 நாட்களில் இந்திய மதிப்பில் ரூ. 141.86 கோடி வசூல் செய்துள்ளதாகத் திரைப்படக்குழு உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.