'துப்பாக்கி' திரைப்படத்தில் விஜய்க்கு நிகராக ரசிகர்களை ஈர்த்தவர் அத்திரைப்படத்தில் வில்லனாக நடித்த வித்யுத் ஜாம்வால்.ஹிந்தியில் Action ஹீரோவாக ' கமாண்டோ 1,2,3 ' என பல திரைப்படங்களில் நடித்துள்ள இவர் உடற்பயிற்சி, கட்டுக்கோப்பான உடல், தற்காப்பு கலை என்பவற்றுக்கு பெயர் பெற்றவர்.
இந்நிலையில் தற்போது வித்யுத், Bollywood தாண்டி Hollywoodஇலும் களமிறங்கி உள்ளார். 'Street Fighter' எனும் புதிய திரைப்படத்தில் தல்சிம் எனும் கதாபாத்திரத்தில் அவர் நடிக்கிறார்.அவரின் சிறப்பு போஸ்டரை திரைப்படக்குழு வெளியிட்ட நிலையில் அது வைரலாகி வருகிறது.
'Street Fighter' என்பது Hollywoodஇல் பிரபல திரைப்பட Series ஆகும். 2026 வெளியாக உள்ள இந்த திரைப்படத்தில் வித்யுத் உடன் பிரபல மல்யுத்த வீரர் ரோமன் ரெய்ன்ஸ், அகுமா எனும் கதாபாத்திரத்தில் நடிக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.