ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில், அஜித்குமார் நடிப்பில் இறுதியாக வெளியான திரைப்படம் ‘Good Bad Ugly’. இந்த திரைப்படத்தில் அர்ஜுன் தாஸ், பிரபு, பிரசன்னா, திரிஷா என பலர் நடித்திருந்தனர்
இந்த திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து மீண்டும் அஜித்குமாரின் புதிய திரைப்படத்தை ஆதிக் ரவிச்சந்திரனே இயக்கவுள்ளார். இது அஜித்குமாரின் 64ஆவது திரைப்படமாகும். அனிருத் இசையமைக்கவிருக்கும் இந்த திரைப்படத்தின் அறிவிப்பு அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் வெளியாக உள்ளது.
இந்த நிலையில், 'AK 64' திரைப்படத்தில் நடிக்கப்போகும் நடிகை குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, இத்திரைப்படத்தில் ரெஜினா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கப்போவதாக தகவல் வெளியாகி உள்ளது. இவர் ஏற்கனவே அஜித்துடன் 'விடாமுயற்சி' திரைப்படத்தில் இணைந்து நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.