56வது இந்திய சர்வதேச திரைப்பட விழா (IFFI) தற்போது கோவாவில் நடைபெற்று வருகிறது. இதில் பல பிரபலங்கள் கலந்து கொள்கிறார்கள்.
இதன் போது சாய் பல்லவியுடன் செல்பி எடுத்துக் கொண்ட நடிகர் அனுபம் கெர் இதனை தனது சமூக வலைதளத்தில் பகிர்ந்து, சாய்பல்லவி பற்றி சின்ன பதிவு ஒன்றையும் பகிர்ந்துள்ளார்.
அதில், “ விழாவில் சாய் பல்லவியைச் சந்தித்ததில் நான் மகிழ்ச்சியடைந்தேன். அவர் உண்மையானவர், பாசமுள்ளவர், மற்றும் மரியாதைக்குரியவர். அவர் மிகவும் திறமையான நடிகை. அவரது வரவிருக்கும் அனைத்து திரைப்படங்களுக்கும் எனது வாழ்த்துக்கள்! ஜெய் ஹோ!” என்று தெரிவித்திருக்கிறார்.