1999 ஆம் ஆண்டு கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் வெளியான படையப்பா திரைப்படத்தில் சிவாஜி கணேசன் ரஜினிகாந்த், மறைந்த நடிகை சௌந்தர்யா, வில்லியாக ரம்யா கிருஷ்ணன், நாசர், செந்தில், ரமேஷ் கண்ணா, லட்சுமி, ராதாரவி, உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.
இத் திரைப்படத்திற்கு AR . ரஹ்மான் இசையமைத்திருந்தார். இத் திரைப்படத்தின் பாடல்கள் அனைத்தும் இரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
இதனைத்தொடர்ந்து திரைத்துரையில் ரஜினியின் 50வது வருடத்தை கொண்டாடும் விதமாக அவரது பிறந்தநாள் அன்று இத் திரைப்படம் மீண்டும் relese செய்யப்படவுள்ளது.
இத் திரைப்படம் தொடர்பான தனது அனுபவங்களை ரஜினிகாந்த் பகிர்ந்துகொள்ளும் வீடியோவை சௌந்தர்யா ரஜினிகாந்த் பகிர்ந்துள்ளார்.
அதில் பேசிய ரஜினிகாந்த், நீலாம்பரி கதாபாத்திரத்தில் ஐஸ்வர்யா ராய் நடிக்க வெண்டுமென விரும்பினேன். ஏனெனில் அவரது கண்கள் அவ்வளவு சக்தி வாய்ந்ததாக காணப்படும். அவர் மறுப்பு தெரிவித்ததால் நடிகை ரம்யா கிருஷ்ணன் நடித்ததாக தெரிவித்துள்ளார்.