சந்தீப் ரெட்டி வங்கா இயக்கத்தில் நடிகர் பிரபாஸ் முதல்முறையாக நடிக்கும் திரைப்படம் "ஸ்பிரிட்". சமீபத்தில் இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் துவங்கியது.
இத்திரைப்படம் போதைப்பொருள் மாபியாவைச் சுற்றி வரும் ஒரு Crime திரைப்படம் என்று கூறப்படுகிறது.
இதில் நடிகர் பிரபாஸ் ஒரு போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார். மேலும், பொலிவுட் நடிகை திரிப்தி டிம்ரி இத்திரைப்படத்தின் மூலம் தெலுங்கில் அறிமுகமாகிறார்.
நடிகர் பிரபாஸ் படப்பிடிப்பு தளத்தில் தற்போது இணைந்துள்ளார். மூன்று முதல் நான்கு நாட்களில் இப்படப்பிடிப்பில் பிரபாஸ் கலந்துகொள்வார் என்று கூறப்படுகிறது.
மேலும், “ஸ்பிரிட்” திரைப்படத்தில் பிரகாஷ் ராஜ், விவேக் ஓபராய், காஞ்சனா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.
கொரிய சூப்பர் ஸ்டார் டான் லீயும் இத்திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.