தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான சூர்யா
தற்பொழுது RJ. பாலாஜி இயக்கத்தில் 'கருப்பு' திரைப்படத்தில் நடித்துள்ளார்.
சூர்யாவிற்கு ஜோடியாக திரிஷா நடித்துள்ளார்.
இத் திரைப்படத்திற்கு சாய் அபயங்கர் இசையமைத்துள்ளார்.
சுவாசிகா, இந்திரன்ஸ், யோகி பாபு, ஷிவாதா, சுப்ரீத் ரெட்டி, அனகா மாயா ரவி மற்றும் நட்டி நட்ராஜ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
இத் திரைப்படம் நீதிமன்ற வழக்கு ஒன்றை மையமாக வைத்து அதில் கடவுள் நம்பிக்கையை இணைத்து உருவாகியுள்ளது. இத் திரைப்படம் january மாதம் 23 ஆம் திகதி வெளியாகவுள்ளது.