Indo Cine Appreciation Foundation கடந்த 2003ஆம் ஆண்டு முதல் சென்னை சர்வதேசத் திரைப்பட விழாவை நடத்தி வருகிறது. அந்த வகையில் 23வது சென்னை சர்வதேச திரைப்பட விழா வரும் டிசம்பர் 11 முதல் 18 வரை சென்னை PVR சினிமாஸ் இல் நடைபெற உள்ளது.
51 நாடுகளை சேர்ந்த 122 திரைப்படங்கள் இந்த விழாவில் திரையிடப்பட உள்ளன. அவற்றில் 13 திரைப்படங்கள் தேர்வு செய்யப்பட்டு விருது வழங்கப்படும்.
அந்த வகையில், 'Tourist Family', 'மாமன்', 'பறந்து போ', '3BHK' ,'அலங்கு', 'வேம்பு', 'பிடிமண்', 'காதல் என்பது பொது உடைமை', 'மாயக்கூத்து', 'Once Upon a Time in Madras', 'மெட்ராஸ் மேட்னி', 'மருதம்'ஆகிய 12 தமிழ் திரைப்படங்கள் திரையிடப்படுகின்றன.இவை தவிர்த்து சிறப்பு திரையிடலுக்கு 'பாட்ஷா' திரைப்படம் தேர்வாகி உள்ளது.
ரஜினியின் 50 ஆண்டுகால சினிமா பங்களிப்பை போற்றும் விதமாக மற்றும் பாட்ஷா படத்தின் 30 ஆண்டு கால பயணைத்தையும் சத்யஜோதி பிலிம்ஸ் 60 ஆண்டு கால பயணத்தையும் கொண்டாடும் விதமாக இத்திரைப்படம் திரையிடப்படுகிறது.