தமிழ் சினிமாவின் பிரமாண்ட இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் சமீபத்தில் வெளியான திரைப்படங்கள் 'இந்தியன் 2 ' மற்றும் 'கேம் சேஞ்சர்'.
இவ்விரு திரைப்படங்களும் தோல்வியைத் தழுவியது. இதற்கிடையில், இயக்குநர் ஷங்கர் அடுத்ததாக சு.வெங்கடேசன் எம்.பி. எழுதிய 'வீரயுக நாயகன் வேள்பாரி' நாவலை இயக்கவுள்ளதாக அறிவித்திருந்தார்.
இந்த நிலையில், 'வேள்பாரி' திரைப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் 2026ஆம் ஆண்டு ஜூன் மாதம் ஆரம்பமாகும் என்றும், இத்திரைப்படத்தில், நடிகர் சூர்யா கதாநாயகனாக நடிக்கவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
விரைவில் இதுகுறித்த அதிகாரபூர்வ அறிவிப்புகள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.