தமிழ், தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகையாக இருப்பவர் சமந்தா.
இவர், தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவை காதலித்து 2017ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்.
ஆனால், நான்கு ஆண்டு திருமண வாழ்க்கைக்குப் பிறகு ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அவர்கள் விவாகரத்து செய்து கொண்டார்கள்.
கடந்த ஆண்டு நடிகை சோபிதா துலிபாலாவை நாகசைதன்யா 2ஆவதாக திருமணம் செய்துகொண்ட நிலையில், சமீபத்தில் நடிகை சமந்தா இயக்குநர் ராஜ் நிடிமொருவைத் திருமணம் செய்து கொண்டார்.
இந்த நிலையில், நடிகை சமந்தாவுக்கு ராஜ் நிடிமொரு அவர்கள் ஐதராபாத்தில் உள்ள ஜூப்லி ஹில்ஸ் பகுதியில் ஒரு பங்களா வாங்கி அதை தன் மனைவி சமந்தாவுற்கு கல்யாணப் பரிசாகக் கொடுத்துள்ளார்.