கடந்த 2019 ஆம் ஆண்டு வெளியான 'நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா' திரைப்படத்தில் கதாநாயகனாக தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் ரியோ ராஜ்.
இதனைத் தொடர்ந்து பல திரைப்படங்களில் நடித்துள்ளார். அண்மையில் இவர் நடிப்பில் 'ஆண் பாவம் பொல்லாதது' திரைப்படம் வெளியானது.
அதனைத் தொடர்ந்து ராம்சந்திரன் கண்ணன் இயக்கத்தில் 'Raam in Leela' திரைப்படத்தில் ரியோ ராஜ் நடிக்கவுள்ளார். இத் திரைப்படத்திற்கு அங்கித் மேனன் இசையமைக்கிறார். கதாநாயகியாக வர்திகா நடிக்க உள்ளார். இத் திரைப்படம் காதல் கதைக்களத்தில் உருவாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இத் திரைப்படத்தின் Title இந்த மாதம் 1 ஆம் திகதி வெளியாகியுள்ளது.இத் திரைப்படத்தின் தொடக்க விழாவில் சிறப்பு விருந்தினராக விஜய் சேதுபதி கலந்து கொண்டு படக்குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.